ADDED : மார் 07, 2025 05:42 AM
அரியாங்குப்பம்: மண்டபங்களில், தரமில்லாமல் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிடம், வியாபாரிகள் மனு கொடுத்தனர்.
அரியாங்குப்பம் வியாபாரிகள், கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் நாகராஜிடம் கொடுத்துள்ள மனு;
புதுச்சேரியில் தனியார் திருமண மண்டபங்களை, அதன் உரிமையாளர்கள், வாடகைக்கு கொடுக்கின்றனர். வெளி மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு, தரமற்ற பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.அரியாங்குப்பம் பகுதி தனியார் திருமண மண்டபங்களில், பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். அதனால், அரசிற்கு ஜி.எஸ்.டி., வரி செலுத்தும் கடை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருமண மண்டபங்களில், பொருட்களை விற்பனை செய்பவர்கள், அனுமதி இல்லாமல், அரசுக்கு எவ்வித வரி, செலுத்தாமல் வியாபாரம் செய்து விட்டு செல்கின்றனர்.எனவே,வியாபாரிகளின் நலன் கருதி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.