/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நகரில் இன்று போக்குவரத்து மாற்றம்
/
விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நகரில் இன்று போக்குவரத்து மாற்றம்
விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நகரில் இன்று போக்குவரத்து மாற்றம்
விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நகரில் இன்று போக்குவரத்து மாற்றம்
ADDED : செப் 11, 2024 02:02 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் விநாயகர் சிலைகளை இன்று ஊர்வலமாக எடுத்துச்சென்று கொண்டு சென்று கடலில் விஜர்சனம் செய்யகரைக்கும் நிகழ்ச்சி இன்று நடக்க உள்ளதால், தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து வடக்கு மற்றும் கிழக்கு பிரிவு போலீஸ் எஸ்.பி., செல்வம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் கடந்த, 7,ம் தேதி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட வழிபாடு நடந்தது. இந்த சிலைகள் இன்று
சாரம், அவ்வை திடலில் இருந்து பகல் 12:00 மணிக்கு ஊர்வலமாக கொண்டு சென்று, கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது.
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக, தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி காலாப்பேட் மார்க்கமாக, புதுச்சேரி புதிய பஸ் நிலையம் வரும் டவுன் பஸ்கள், ரூட் பஸ்கள், அனைத்து கனரக மற்றும் இலகுரக வாகனங்கள், முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பில், சிவாஜி சிலை நோக்கி சென்று, கொக்கு பார்க்-ராஜிவ் காந்தி சிலை - இந்திராகாந்தி சிலை - நெல்லித்தோப்பு வழியாக, புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அடைய வேண்டும்.
அதேபோல், புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து, புஸ்ஸி வீதி - ஆம்பூர் சாலை - முத்தியால்பேட்டை - வழியாக காலாப்பேட் மற்றும் சென்னை செல்ல வேண்டிய டவுன் பஸ்கள், ரூட் பஸ்கள், கனரக மற்றும் இலகுரக வாகனங்கள், புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து, புறப்பட்டு வெங்கட்ட சுப்பா ரெட்டியார் சதுக்கத்தில் இடது பக்கம் திரும்பி மறைமலை அடிகள் சாலை வழியாக, இந்திராகாந்தி சதுக்கம்-ராஜிவ்காந்தி சதுக்கம் வழியாக காலாபேட் மற்றும் சென்னை செல்ல வேண்டும்.
காமராஜ் சாலையில் லெனின் வீதியில் இருந்து ராஜா தியேட்டர் வரை மதியம், 12:00 மணியில் இருந்து மாலை 5:00 மணி வரை அனைத்து விதமான வாகனங்களின் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
விநாயகர் சிலை ஊர்வலமானது, நேரு வீதியை கடக்கும் வரை, அண்ணாசாலையில் மாலை 3:00 மணி முதல் அனைத்து வகையான வாகனங்கள் இயக்க முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இந்த வாகனங்கள் அனைத்தும் அண்ணாசாலை, 45 அடி சாலை மற்றும் ஒதியஞ்சாலை சந்திப்புகளில் திசை திருப்பப்படும்.
விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது நேரு வீதி, காந்தி வீதி, மற்றும் எஸ்.வி.பட்டேல் சாலையில் அனைத்து வகையான வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
மேலும் பிரதான விநாயகர் சிலை ஊர்வலமானது, சாரம், அவ்வை திடலில் தொடங்கி காமராஜ் சாலை வழியாக பட்டாணிக்கடை சந்திப்பை வந்தடையும். முத்தியால்பேட்டை வழியாக வரும் சிலைகள் அனைத்தும் அஜந்தா சிக்னல் கடந்து அண்ணாசாலை வழியாகவும், நெல்லித்தோப்பு வழியாக வரும் சிலைகள் அனைத்தும் ஒதியஞ்சாலை சிக்னல் கடந்து அண்ணாசாலை வழியாக பட்டாணிக்கடை சந்திப்பை அடைந்து அனைத்து சிலைகளும், ஒரே ஊர்வலமாக - நேருவீதி - மகாத்மா காந்தி வீதி வழியாக, அஜந்தா அடைந்து எஸ்.வி.பட்டேல் சாலை வழியாக கடற்கரை சாலை செல்ல உள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், இதனை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட சாலைகளை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு ஆட்படாமல் இருக்க வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.