/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கு பயிற்சி
/
ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கு பயிற்சி
ADDED : மார் 23, 2024 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார் : வில்லியனுார், மங்கலம் மற்றும் உழவர்கரை தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வாக்குச் சாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி பயிலரங்கம் ராக் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில்குமார் தலைமையில் நடந்த பயிற்சி முகாமில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் முறைகள் மற்றும் ஓட்டுச் சாவடி அறையின் நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

