ADDED : மே 07, 2024 05:26 AM
நெட்டப்பாக்கம் : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மடுகரை பாலாஜி நகர் 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு மகன் கிருஷ்ணராஜ் 29, இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மது குடித்துவிட்டு, மடுகரை தொந்திரெட்டிப்பாளையம் சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
தகவலறிந்த மடுகரை போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் அவர் தொடர்ந்து ஆபாசமாக பேசிக்கொண்டு, பொது மக்களிடம் தகராறில் ஈடுப்பட்டார். இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதேபோல், கரியமாணிக்கம் புதுக்காலனியைச் சேர்ந்த குமார் மகன் கிருஷ்ணகுமார் 18, மது குடித்துவிட்டு பொது இடத்தில் ஆபாசமாக பேசியாதால் அவர் மீது நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.