ADDED : ஆக 01, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கஞ்சா விற்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை சோலை நகர் பூங்காவில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப்இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை பூங்கா அருகே சென்றபோது, சந்தேகத்திடமாக நின்றிருந்த இருவரை பிடித்து சோதனை நடத்தினர். இருவரும் 150 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், உப்பளம் சோனாம்பாளையம் சாலை, இமானுவேல் மகன் ஜோல், 19; முத்தியால்பேட்டை வைத்திக்குப்பம், அய்யனார் கோவில் வீதி, வேல்முருகன் மகன் அவிநாஷ், 19; என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.