தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையத்தில் இரண்டு நாள் பயிற்சி முகாம் 

எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையத்தில் இரண்டு நாள் பயிற்சி முகாம் 

எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையத்தில் இரண்டு நாள் பயிற்சி முகாம் 


ADDED : செப் 13, 2024 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2024 06:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையத்தில் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.

புதுச்சேரி எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையம், ஜப்பானின் ஏ.ஓ.டி.எஸ்., நிறுவனம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டுக்கான தொழில் நுட்ப பயிற்சிகளை அளித்து வருகிறது.

அதன்படி, புதுச்சேரி எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையம், கெய்சைன் மற்றும் 5 எஸ் முறைகளை மையமாகக் கொண்ட இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.

புதுச்சேரி எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையத்தின் துணைப் பொது மேலாளர் அமித் நைன் புதுச்சேரி எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையத்திற்கும், ஜப்பானின் வெளிநாட்டுத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் நிலையான கூட்டாண்மைக்கான சங்கத்திற்கும் (ஏ.ஓ.டி.எஸ்.,) இடையேயான தொழில்நுட்ப ஒத்துழைப்பு உறவுகள் குறித்து' கூறினார்.

மேலும், இந்தக் கூட்டிணைவு மூலம், நீண்ட காலத்திற்கு ஜப்பானியத் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் அறிவுப் பூர்வமான வளங்களைப் பரிமாறிப் பயன்படுத்த முடியும்.

இந்தக் கூட்டிணைவின் ஆரம்பக் கட்டமாக, ஜப்பானில் இருந்து அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள், உற்பத்தித் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வழிமுறைகள், நுண்ணறிவுத் தகவல்களை வழங்கியுள்ளனர்.

இதில், பங்கேற்ற 40 பேரும், அந்தந்த உற்பத்திச் செயல் முறைகளை தடையின்றி ஒருங்கிணைக்க ஆர்வமாக உள்ளனர்.

இதன் மூலம் புதுமை யான தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பது மட்டுமன்றி அதன் வளர்ச்சியையும் பெருக்க முடியும்.

இது உள்ளூர் நிறுவனங்களுக்கு பல நன்மைகளை வழங்குவதுடன், ஜப்பானியப் பயிற்சியாளர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்த வாய்ப்பாக அமைகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us