/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துாய்மை பணியாளர்களுக்கு தடுப்பூசி முகாம்
/
துாய்மை பணியாளர்களுக்கு தடுப்பூசி முகாம்
ADDED : ஏப் 28, 2024 04:05 AM

புதுச்சேரி, : உழவர்கரை நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் நல்வாழ்வு, நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம், நேற்று ஜவஹர் நகர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.
உழவர்கரை நகராட்சியுடன், மெட்பிட் மருத்துவ ஆய்வகம், இந்திய இளைஞர் விடுதிகள் சங்கத்தின் காலாபேட் கிளை மற்றும் குளோபல் ேஷப்பர்ஸ் அகாடமி இணைந்து, தேசிய தடுப்பூசி வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. மெட்பிட் மருத்துவ ஆய்வக நிலைய இயக்குனர் குமரேசன் வரவேற்றார். உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் சிறப்புரையாற்றினார். அப்போது, துாய்மை பணியாளர்களுக்கான தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.
இந்திய இளைஞர் விடுதிகள் சங்க மாநில கிளைத் தலைவர் சரவணன், துணைத் தலைவர் செந்தில்குமார், மெட்பிட் மருத்துவ ஆய்வக நிலைய அதிகாரி அருண் நாகலிங்கம், குளோபல் ேஷப்பர்ஸ் அகாடமி ரேணுகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முகாமில், மருத்துவ ஆய்வக ஊழியர்கள் சவுந்தர்யா, ரித்திகா, காயத்ரி ஆகியோர் துாய்மை பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, உழவர்கரை நகராட்சி மருத்துவ அதிகாரி ஜெய்சங்கர், இளநிலை பொறியாளர் சேகர், இந்திய இளைஞர் விடுதிகள் சங்க காலாபேட் கிளை செயலர் சண்முகம், மணி, சக்திவேல் செய்தனர்.

