ADDED : ஜூலை 19, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் வி.சி., மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
உருளையன்பேட்டை தொகுதி மாவட்ட செயலாளர் மணவாளன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உளுந்துார்பேட்டையில் அடுத்த மாதம் 17ம் தேதி தமிழ் தேசிய மாநாட்டை முன்னிட்டு உருளையன்பேட்டை தொகுதியில் விளம்பரங்கள் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து கடைகளை திறக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
