/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிநீர் இணைப்பு ஆணையர் எச்சரிக்கை
/
குடிநீர் இணைப்பு ஆணையர் எச்சரிக்கை
ADDED : மே 25, 2024 01:32 AM
நெட்டப்பாக்கம்: முறையற்ற குடிநீர் இணைப்பை வரும் ஜூன் 30ம் தேதிக்குள் முறைப்படுத்தி கொள்ள வேண்டும் என நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தெரவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பு:
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள், கொம்யூன் பஞ்சாயத்திடம் உரிய அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பினை எடுத்திருந்தால் அது சட்ட விரோதமான செயலாகும்.
ஆகையால் விதிகளுக்கு மாறாக தாங்கள் எடுத்த குடிநீர் இணைப்பினை வரும் ஜூன் 30ம் தேதிக்குள் உடனடியாக முறைப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தவறும் பட்சத்தில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளின் சட்டம் 1973 கீழ் தங்களின் குடிநீர் இணைப்பினை எவ்வித முன்னறிவிப்புமின்றி துண்டிப்பதோடு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

