ADDED : ஆக 10, 2026 05:52 PM
புதுச்சேரி: புதுச்சேரி சுதானா நகரில் உள்ள நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகள் நடப்பதை யொட்டி, இந்த பகுதிகளில் இரு நாட்கள் குடிநீர் விநியோகம் தடைபடும் என, பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி அரசின் பொதுப்பணி துறை பொது சுகாதார கோட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி சுதானா நகரில் உள்ள கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டி மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகள் நடக்கவுள்ளது. இதையொட்டி, நாளை (12ம் தேதி), 13ம் தேதி ஆகிய இரு நாட்கள் பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை சுதானா நகர், துளுக்கானத்தம்மன் நகர், அங்காளம்மன் நகர், காமராஜர் நகர், குயவர் வீதி, அரவிந்தர் நகர், நேதாஜி நகர், திருமகள் நகர், மக்கள் நகர், நைனார்மண்டபம், மகாலட்சுமி நகர், முத்துலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், சேத்திலால் நகர், வசந்த நகர், ஆதிபராசக்தி நகர், நேரு நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
