/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டணி கட்சிகளுக்கு நமச்சிவாயம் நன்றி
/
கூட்டணி கட்சிகளுக்கு நமச்சிவாயம் நன்றி
ADDED : ஏப் 20, 2024 04:48 AM
புதுச்சேரி : கூட்டணி கட்சியினர் மற்றும் தொண்டர்களுக்கு பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் நன்றி தெரிவித்தார்.
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், நேற்று காலை வில்லியனுார் அரசு தொடக்கபள்ளியில் ஓட்டளித்த பிறகு, அவர், கூறியதாவது:
புதுச்சேரி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கம் தேர்தல். மக்கள் ஆர்வமுடன் ஓட்டு அளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் எனக்கு மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது.
புதுச்சேரி வளர்ச்சி பெறுவதற்கு மக்கள் ஓட்டு அளிக்கின்றனர். அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.
கூட்டணி கட்சி தலைவர்கள், பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா, முதல்வர் ரங்கசாமி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உள்ளிட்டோர் சுறுசுறுப்பாக பணியாற்றிய தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
புதுச்சேரியில் அனைத்து பிராந்தியத்திலும் அதிக ஓட்டுகள் பெறுவோம். மக்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
கிராமம் கிராமமாக என்னை அழைத்து சென்று பிரசார பயணத்தை திட்டமிட்டபடி முடித்த முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.

