/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்: முன்னாள் முதல்வர் திட்டவட்டம்
/
புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்: முன்னாள் முதல்வர் திட்டவட்டம்
புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்: முன்னாள் முதல்வர் திட்டவட்டம்
புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்: முன்னாள் முதல்வர் திட்டவட்டம்
ADDED : ஜூலை 31, 2024 04:07 AM

புதுச்சேரி : புதுச்சேரி ஆட்சியை நாங்கள் கவிழ்க்க மாட்டோம் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, 'நிடி ஆயோக்' கூட்டத்தை புறக்கணித்துள்ளார். இதையடுத்து அவருக்கு, மாநில வளர்ச்சியில் அவருக்கு அக்கறை இல்லை. பா.ஜ., மற்றும், என்.ஆர்.காங்., இடையே கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்த ஆட்சி நீடிக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதை குறை பிரசவ ஆட்சியாகத்தான் நினைக்கிறோம்.அதேசமயத்தில், ஆட்சி கவிழ்ப்பு வேலையில் நாங்கள் ஈடுபட மாட்டோம்.
பா.ஜ., அமைச்சர் சாய் சரவணன் குமார், புதுச்சேரி அரசை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.
இது முதல்வருக்கு மிகப்பெரிய அவமானம். அவர், அந்த அமைச்சரை அழைத்து, வழக்கை வாபஸ் பெற உத்தரவிட வேண்டும். அப்படி இல்லை எனில், அவரை அமைச்சரவையில் இருந்து, 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்.
வெளிமாநிலங்களில் நடந்து வந்த அதானி ராஜ்ஜியம், புதுச்சேரியில் அரங்கேற துவங்கி உள்ளது. இங்குள்ள அமைச்சர் நமச்சிவாயம், குஜராத் சென்று அதானியை சந்தித்துள்ளார்.
அதன் பிறகு, புதுச்சேரி அரசு மின்துறையை, அதானிக்கு தாரை வார்க்க கையெழுத்து போட்டுள்ளனர்.
அதானியின் அழுத்தம் காரணமாக, முதல்வர் ரங்கசாமியை மிரட்டி, கையெழுத்து வாங்கி உள்ளனர். அதானி ஏற்கனவே, காரைக்கால் துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார். இது மக்களுக்கான ஆட்சி கிடையாது. முதலாளிகளுக்கான ஆட்சி.
இவ்வாறு அவர் பேசினார்.