/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரை தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு வரவேற்பு

ADDED : ஏப் 11, 2024 04:11 AM

புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவரை ஆதரித்துமுதல்வர் ரங்கசாமி திறந்த வேனில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
நேற்று மாலை உழவர்கரை தொகுதியில் தீவிர பிரசாரம் செய்தார்.
அப்போது முதல்வர் ரங்கசாமி, வேட்பாளர் நமச்சிவாயம் ஆகியோர்களுக்கு, உழவர்கரை தொகுதி, ஜவகர் நகரில் பா.ஜ., பொருளாதார பிரிவுமாநில தலைவி பிரபாதேவி வீரராகு தலைமையில் மேளதாளம் முழங்க, குயிலாட்டம்,
மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பட்டாசு மற்றும் வாணவேடிக்கைகளுடன்ஜவகர்நகர், பாவாணர்நகர், பொன்நகர் பகுதிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டபெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக, மூலகுளத்தில் உள்ள பிரபாதேவி வீரராகுவின் வீட்டில் இருந்து2,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனங்களுடன் புறப்பட்டு, முதல்வர்மற்றும் வேட்பாளரின் பிரசார வாகனம் முன் அணிவகுத்து சென்றனர்.
பிரசாரத்தின்போது தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கரன், முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், பா.ஜ.,மாநில செயலாளர் சரவணன், டாக்டர் நாராயணசாமி, பா.ம.க., மாநிலஅமைப்பாளர் கணபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.