ADDED : ஆக 05, 2026 05:31 PM
புதுச்சேரி: மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால், ஆட்டோ டிரைவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முத்தியால்பேட்டை முத்தைய முதலியார் வீதியில் வசித்தவர் பிரதாப்குமார்,54; ஆட்டோ டிரைவரான பிரதாப்குமார் தினமும் குடித்துவிட்டு வந்ததால், மனைவி மான்விழியுடன் அடிக்கடி தகறாறு ஏற்பட்டது. இதனால், மான்விழி கோபித்துக் கொண்டு, சவுக்குப்பேட்டில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று, தங்கிவிட்டார்.
கடந்த 2ம் தேதி பிரதாப்குமார் மதுகுடித்துவிட்டு வந்து, தனது பேரப்பிள்ளையுடன் விளையாடி உள்ளார். மது குடித்துவிட்டு வந்து குழந்தையை கொஞ்ச வேண்டாம் என, மான்விழி கண்டித்தார். இதனால், பிரதாப்குமார் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார்.
நேற்று முன்தினம் முத்தியால்பேட்டை வீட்டிற்கு மான்விழி வந்து பார்த்தபோது, பிரதாப்குமார் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து மான்விழி புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
