மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
UPDATED : ஆக 05, 2026 05:33 PM
ADDED : ஆக 05, 2026 05:31 PM
புதுச்சேரி: போலீசாருக்கு ஜனாதிபதி வண்ண விருது வழங்க மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 8ம் புதுச்சேரி வருவதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.
புதுச்சேரி போலீசாருக்கு மிக நீண்ட கால சேவை, ராணுவக்கட்டுபாடு, ஒழுக்கம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில், சிறப்பாக செயல்பட்டதற்காக ஜனாதிபதி வண்ண விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க விருதினை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (8ம் தேதி) புதுச்சேரி வருகை தர உள்ளார்.
தொடர்ந்து 9ம் தேதி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், போலீசாருக்கு ஜனாதிபதியின் வண்ண விருதினை வழங்கி, வாழ்த்த உள்ளார். இந்நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணத்தால், நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இந்த விழா வரும் 9ம் தேதி நடக்க உள்ளது.
கோரிமேடு போலீஸ் மைதானத்தில், இதற்கான ஏற்பாடுகள் தற்போது மீண்டும் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. ஏற்பாடுகளை கவனிக்க கிரீன் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் தங்குவதற்காக கடற்கரை சாலையையொட்டி, உள்ள துாய்மா வீதியில் நீதிபதி விருந்தினர் மாளிகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சரின் வருகையையொட்டி, விருந்தினர் மாளிகை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
