/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி மின் துறை தனியார் மயமாகுமா? சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் காரசார விவாதம்
/
புதுச்சேரி மின் துறை தனியார் மயமாகுமா? சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் காரசார விவாதம்
புதுச்சேரி மின் துறை தனியார் மயமாகுமா? சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் காரசார விவாதம்
புதுச்சேரி மின் துறை தனியார் மயமாகுமா? சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் காரசார விவாதம்
ADDED : ஆக 06, 2024 07:12 AM
புதுச்சேரி : புதுச்சேரி மின் துறை தனியார்மயமாக்குதல் குறித்து சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார், தி.மு.க., பேசியதாவது;
பட்ஜெட்டில் மின் துறைக்கு 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மின் துறையை தனியார்மயக்க முடிவு செய்த பிறகு இவ்வளவு நிதி ஒதுக்க வேண்டுமா.
சபாநாயகர் செல்வம்: முதல்வரின் பட்ஜெட் உரையை சரியாக படிக்கவில்லையா. மின் துறை காலி பணியிடங்களை அரசு நிரப்பும் என முதல்வர் தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும்போது மின்துறை எப்படி தனியார்மயமாகும். மின் துறை தனியார்மயமாக்கப்படாது என்று முதல்வர் சொல்லியுள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவர் சிவா: மின் துறை தனியார்மயமாக்கப்படாது என்று முதல்வர் எங்களிடம் தெரிவிக்கவில்லை. சபாநாயகரிடம் மட்டும் தனியாக முதல்வர் சொல்லியுள்ளாரா. சபாநாயகர் பா.ஜ., தலைவர் போல் உள்ளார். சுற்றி வளைத்தெல்லாம் பேச கூடாது. மின் துறை தனியார்மயமாகுமா அல்லது இல்லை.
அப்போது அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் எழுந்து நின்று மின் தடை சம்பந்தமாக பேசினர். ஒரே நேரத்தில் அனைவரும் பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது.
அமைச்சர் நமச்சிவாயம்: புதுச்சேரியில் மின்பற்றாக்குறை இல்லை. மின்சாதன பொருட்கள் 40 ஆண்டுகள் பழமையானவை. மத்திய அரசு உதவியுடன் அதை மேம்படுத்த உள்ளோம். ஒப்புதல் கிடைத்தவுடன் முழுமையாக மின்சாதனங்கள் மாற்றப்படும். இதில் 60 சதவீதம் மத்திய அரசு நிதி தரும். மின்துறையில் ஆள் பற்றாக்குறை இருக்கிறது. தனியாருக்கு போவதாக சங்கடங்கள் இருந்தாலும் அதை மீறி ஆட்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கிறோம். ரெகுலர் போஸ்ட் மின்துறையில் எடுக்கப்போகிறோம்.
எதிர்க்கட்சித்தலைவர் சிவா: மின்துறை தனியார்மயமாவதால், பிரீபெய்டு மீட்டர் மாற்றுவது, முதலில் இருந்து பல்வேறு மீட்டர்கள் வாங்கினீர்கள். தனியாருக்கு தருவதற்காகதான் இப்பணிகளை செய்கின்றீர்கள். தனியார்மயமாக்க முயற்சி தான் இது.
அமைச்சர் நமச்சிவாயம்: தமிழகத்தில் மின் மீட்டர் வாங்க டெண்டர் வைத்துள்ளனர். மின் துறையை பொருத்தவரை மக்களின் நலனே முக்கியம். மின் துறை காலி பணியிடங்களை நிரப்பவுள்ளோம் என்று பட்ஜெட்டில் முதல்வர் சொல்லியுள்ளார்.
சபாநாயகர் செல்வம்: மின்துறை காலிபணியிடம் நிரப்புதவாக சொல்லியுள்ளார்.அப்புறம் ஏன் தனியார்மயம் என்று சொல்லவேண்டும்.
எதிர்க்கட்சித்தலைவர்- சிவா: நல்ல சபாநாயகர் தேவை. பா.ஜ., தலைவர்தான் உள்ளார். முதல்வர் சொல்லட்டும்.
ராமலிங்கம்- (பா.ஜ.,): மின் துறை தனியார்மயம் ஆவதை பா.ஜ.,வும் எதிர்க்கிறது. எங்களுக்கும் இதில் உடன்பாடு இல்லை.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: மத்திய அரசு புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கவே முயற்சிக்கிறது. வாய் வார்த்தை இல்லாமல் உள்துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.
அமைச்சர் நமச்சிவாயம்: மின் துறையை மேம்படுத்த முயற்சி செய்கிறோம்.கவலைப்படவேண்டாம். நல்ல முறையில் நடக்கும். தனியாருக்கு ஆதரவாக இல்லை.
மக்களுக்கு ஆதரவாக இருப்போம்.விவசாயத்தில் இலவச மின்சாரம் இருக்கும். தனியார்மயம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. மக்களின் கருத்துகளை இந்த அரசு எப்போதும் ஏற்கும். அதற்கு மாறாக எப்போதும் நடக்காது.
சபாநாயகர் செல்வம்: முதல்வரும், அமைச்சரும் சொல்லிவிட்டதால் தனியார்மயம் ஆகாது.