ADDED : மார் 07, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷனில், மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, எஸ்.பி., ரகுநாயகம் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வரவேற்றார். சீனியர் எஸ்.பி., கலைவாணன் கலந்து கொண்டு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பான சட்டப்பிரிவுகள் மற்றும் போக்சோ வழக்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவள்ளுவர் அரசு பள்ளி, வம்பாகீரப்பாளையம் மகளிர் தொழில்நுட்ப கல்லுாரி மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாணவிகள் போலீஸ் ஸ்டேஷன் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு விளக்கம் பெற்றனர்.
சப் இன்ஸ்பெக்டர் பிரபு நன்றி கூறினார்.