ADDED : மார் 06, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி,: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வரும் 8ம் தேதி பெண்களுக்கான மக்கள் மன்றம் நடக்கிறது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் 8ம் தேதி பெண்களுக்கு பிரத்தியோகமாக மக்கள் மன்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 11;00 மணி முதல் 1;00 மணி வரை புதுச்சேரி மகளிர் போலீஸ் நிலையத்தில் சட்ட ஒழுங்கு டி.ஐ.ஜி., தலைமையில் நடக்கிறது. தொடர்ச்சியாக வில்லியனூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் சட்டஒழுங்கு எஸ்.எஸ்.பி., தலைமையிலும், முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தெற்கு எஸ்.பி.,தலைமையிலும் நடக்கிறது.இதே போன்று, தன்வந்தரி போலீஸ் நிலையத்தில் வடக்கு எஸ்.பி., மாகி போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., ஏனாம் போலீஸ் நிலையத்தில், எஸ்.பி., தலைமையிலும் நடக்கிறது.