நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர் அடுத்த குருவிநத்தம் வாழப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் 66; கூலி தொழிலாளி. இவரது மனைவி தனம் 58. இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். சுப்ரமணி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். கடந்த 2ம் தேதி தனது மனைவியிடம், மது குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் இல்லை என கூறி விட்டு, சிதம்பரத்தில் உள்ள காளி கோவிலுக்கு சென்று விட்டார்.
அவர் அன்று இரவு 7:00 மணியளவில் வந்து பார்த்தபோது, சுப்ரமணி படுக்கை அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

