/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யோகாஞ்சலி நாட்டியாலயத்திற்கு உலக சாதனை விருது
/
யோகாஞ்சலி நாட்டியாலயத்திற்கு உலக சாதனை விருது
ADDED : ஆக 20, 2024 05:16 AM

புதுச்சேரி: புதுச்சேரி யோகாஞ்சலி நாட்டியாலயத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யோகாஞ்சலி நாட்டியாலயா கலைத் துறையில் கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக யோகா, பரதநாட்டியம் மற்றும் கர்நாடக வாய்ப்பாட்டிசையில் சிறந்து விளங்கி வருகிறது.
இதனை பாராட்டி, உத்தரபிரதேசம், லக்னோ ஒர்த்தி வெல்னஸ் பவுண்டேஷன், யோகாஞ்சலி நாட்டியாலயத்திற்கு உலக சாதனை பட்டியலில் சிறந்த நிறுவனம் என்ற விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது.
விருதை, நிறுவன தலைவர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி, நாட்டியாலாயம் துணை இயக்குநர் திவ்ய பிரிய பவனானி, செயலாளர் தேவசேனா பவனானி, பொதுமேலாளர் சண்முகம், மக்கள் தொடர்பு அலுவலர் லலிதா சண்முகம் பெற்றுக் கொண்டனர்.