தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜூலை 23, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: கூடப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பூங்குழலி தலைமை தாங்கி, பேசுகையில், அதிகரித்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்ப நலத் திட்டங்களை முறையாகப் பின்பற்ற வேண்டிய அவசியம் மற்றும் தாய்-சேய் நலன் பாதுகாக்க குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து எடுத்து கூறினார்.

செவிலியர்கள் மேற்பார்வையாளர் சாயிராபானு, செவிலியர் வாணி முன்னிலை வகித்தனர். செவிலியர் மாவினி வரவேற்றார்.

குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நாடகம் மற்றும் மாணவர்களின் ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கர்ப்பிணி, தாய்மார்கள் பங்கேற்றனர். ெவிலியர் கலைச்செல்வி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆஷா பணியாளர்கள் செல்வரசி, ஆனந்தி, குணசுந்தரி, சுமதி ஆகியோர் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us