ADDED : ஜூன் 25, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மன விரக்தியில் இருந்த இளம்பெண் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் ராஜா மகள் தனலட்சுமி, 32. இவர் திருமணம் செய்து கொள்ளாமல், சமூக சேவையில் ஈடுபட்டார். மனவிரக்தியில் இருந்த இவர் கடந்த 21ம் தேதி புதுச்சேரி மெரினா கடற்கரையில் எலிபேஸ்ட் சாப்பிட்டார். அங்கிருந்தவர்கள் மூலம் அவரை புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார். இவர் கடந்த 2019ம் ஆண்டு தற்கொலை செய்து கொள்ள எலிபேஸ்ட் சாப்பிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
