ADDED : ஜூலை 18, 2026 10:45 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் பல்வேறு இடங்களில் மூன்று பைக்குகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் பைக் திருட்டு நடந்து வந்தது. இதையடுத்து, திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நேற்று முன்தினம் போலீசார் சுரக்குடி அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர், திருநள்ளாறு, கருக்கங்குடி, புதுமனை தெரு பகுதியை சேர்ந்த ஜமால் மொய்தீன் மகன் அப்துல் ரகுமான், 24, என்பதும், திருநள்ளாறு, அத்திப்படுகை சாலை உட்பட பல இடங்களில் பைக்குகளை திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அப்துல் ரகுமானை கைது செய்து, மூன்று பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
