/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைபர் மோசடி கும்பலிடம் 10 பேர் ரூ.3.12 லட்சம் இழப்பு
/
சைபர் மோசடி கும்பலிடம் 10 பேர் ரூ.3.12 லட்சம் இழப்பு
சைபர் மோசடி கும்பலிடம் 10 பேர் ரூ.3.12 லட்சம் இழப்பு
சைபர் மோசடி கும்பலிடம் 10 பேர் ரூ.3.12 லட்சம் இழப்பு
ADDED : ஜூன் 04, 2025 01:04 AM
புதுச்சேரி: புதுச்சேரி, அண்ணா சாலையை சேர்ந்த பெண் ஒருவரை, தொடர்பு கொண்ட மர்ம நபர் போலீஸ் அதிகாரி போல் பேசி, உங்களது மகனை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்துள்ளதாகவும், அவரை விடுவிக்க 75 ஆயிரம் ரூபாய் அனுப்ப வேண்டும் என, கூறியுள்ளார். இதை நம்பிய அப்பெண் மர்ம நபருக்கு 62 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
லாஸ்பேட்டையைச் சேர்ந்த நபர், ராமேஸ்வரத்தில் தங்குவதற்கு ஆன்லைனில் ஓட்டல் குறித்த விவரங்களை தேடியுள்ளார். அப்போது, அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்,அறை முன்பதிவிற்கு பணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதை நம்பிய அவர், 11 ஆயிரத்து 260 ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இதுபோல், பாகூரைச் சேர்ந்த பெண் 91 ஆயிரத்து 100, முத்தியால்பேட்டை சேர்ந்த நபர் 8 ஆயிரத்து 598, அரியாங்குப்பத்தை சேர்ந்த நபர் 72 ஆயிரத்து 500, ரெயின்போ நகரை சேர்ந்த நபர் 7 ஆயிரத்து 840, சாரத்தை சேர்ந்த பெண் 9 ஆயிரத்து 500, லாஸ்பேட்டை நபர் 4 ஆயிரத்து 800, மதகடிப்பட்டு நபர் 16 ஆயிரத்து 200, லாஸ்பேட்டை நபர் 28 ஆயிரத்து468 என, மொத்தம் 10பேர் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 12ஆயிரத்து 266 ரூபாய் ஏமாந்துள்ளார்.
இதுகுறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.