/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாசவி இண்டர்நேஷனல் பள்ளியில் 12வது ஆண்டு விழா
/
வாசவி இண்டர்நேஷனல் பள்ளியில் 12வது ஆண்டு விழா
ADDED : ஆக 12, 2025 02:52 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை வாசவி இண்டர்நேஷனல் பள்ளியில் 12வது ஆண்டு விழா நடந்தது.
பள்ளியின் துணை முதல்வர் செந்தில்ராஜ் வரவேற்றார். பள்ளி முதல்வர் மாரிமுத்து ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி தலைவர் வேணுகோபால் வாழ்த்தி பேசினார்.
முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி, வாசவி இன்டர்நேஷனல் பள்ளி என்பதை தமிழில் 'வாசவி பன்னாட்டு பள்ளி' என்று தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெயர் பலகையை மாற்றம் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தாய்மொழி தமிழுக்கு முன்னுரிமை அளிக்கும் பள்ளியாக உள்ள வாசவி பள்ளியானது, அனைத்து மாணவர்களும் சிறந்த கல்வியை அளித்து, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய செய்ய வேண்டும் என்றார்.
தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ் குமார், சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பின், மாணவர்களின் பரதம், மிசோரத்தின் மூங்கில் நடனம், அஸ்ஸாமின் பிஹு நடனம், கேரளாவின் கதகளி, சிலம்பாட்டம், ஏ.ஐ., செயற்கை நுண்ணறிவை உணர்த்தும் 'சாட் ஜிபிடி' ஆங்கில நாடகம், 'காலப் பயணம்' தமிழ் நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பள்ளியின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி நன்றி கூறினார்.
முன்னதாக 'வாசவி பன்னாட்டுப் பள்ளி' என தமிழாக்கம் செய்த முகப்பு வளைவு, வாசவி சிலை வைக்கப்பட்ட பெரிய மண்டபம் ஆகியவற்றை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.