ADDED : ஆக 02, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: வெயிலின் தாக்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில், பாகூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் 13 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால், பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 10.00 மணி அளவில், பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு துவங்கி நேற்று அதிகாலை வரையில் 13 செ.மீ., மழை பாகூரில் பதிவானது.
வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் அவதியடைந்து வந்த நிலையில், திடீர் மழையால் பாகூர் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.