ADDED : நவ 17, 2026 10:27 PM
புதுச்சேரி: சேதராப்பட்டு போலீசார் பிப்டிக் தொழிற்பேட்டையில் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட விழுப்புரம் கவியரசன்,25, என்பவரை கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, களம் காத்த மாரியம்மன் கோவில் அருகில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட தர்மாபுரி வேல்முருகன்,52; என்பவரை கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, தனியார் பார்களின் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட லாஸ்பேட்டை முகேஷ்டம்,36; வில்லியனுார் ஜோசப் ஹான்ஸ்ட்ராஜ்,29; முகமது பனிபா,51; ஆகியோரை கைது செய்தனர்.
காலாப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, பிள்ளைச்சாவடி பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட, வானுாரில் தங்கியுள்ள ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுனில்பேக்ரா,24; பங்கஜ்பேரா,25; ரிங்கர் பிரதான்,32; ஆகியோரை கைது செய்தனர்.
ஒதியஞ்சாலை போலீசார் நேற்று முன்தினம் எக்ஸ்போ மைதானத்தில் ரோந்து சென்றபோது, அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட ரெட்டியார்பாளையம் ராஜகுமாரன்,31; என்பவரை கைது செய்தனர்.
திருபுவனை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, மதகடிப்பட்டு சந்திப்பில் ரகளையில் ஈடுபட்ட விழுப்புரம் கவாஸ்கர்,28; என்பவரை கைது செய்தனர்.
மங்களம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, மங்கலம் சாராயக்கடை அருகில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் பாரதி,25; கோர்க்காடு பகுதியில் ரகளையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த மதியழகன்,39, ஆகியோரை கைது செய்தனர்.
பள்ளூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, புதிய கல்லறை சாலை சந்திப்பில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கேரளம் கோழிக்கோடு வஜித்,45; என்பவரை கைது செய்தனர்.
