/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை ஆய்வாளர் எழுத்து தேர்வு 1,595 பேர் பங்கேற்பு; தேர்வறைகள் 'வெறிச்'
/
திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை ஆய்வாளர் எழுத்து தேர்வு 1,595 பேர் பங்கேற்பு; தேர்வறைகள் 'வெறிச்'
திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை ஆய்வாளர் எழுத்து தேர்வு 1,595 பேர் பங்கேற்பு; தேர்வறைகள் 'வெறிச்'
திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை ஆய்வாளர் எழுத்து தேர்வு 1,595 பேர் பங்கேற்பு; தேர்வறைகள் 'வெறிச்'
ADDED : டிச 30, 2024 05:51 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறையில் ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வில், ஆயிரத்து 595 பேர் பங்கேற்றனர்.
புதுச்சேரி திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறையில் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, பெத்தி செமினார், அமலோற்பவம், இமாகுலேட், திருவள்ளுவர், வள்ளலார் உள்ளிட்ட, 10 பள்ளி மையங்களில் நேற்று நடந்தது.
இந்த மையங்களுக்கு காலை, 8:00 மணியில் இருந்து தேர்வர்கள் வரத்துவங்கினர். தொடர்ந்து, 'மெட்டல் டிடெக்டர்' மூலம் தேர்வர்கள் சோதனை செய்யப்பட்டு, ஹால் டிக்கெட்டுகள், புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்றுகள் சரி பார்க்கப்பட்டன.
பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்ட பிறகு மையத்திற்குள் செல்ல தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்தின் நுழைவு வாயில் காலை, 9.30 மணிக்கு மூடப்பட்டது. அதற்கு பிறகு வந்தவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த தேர்வு, காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை நடந்தது. இதில் பங்கேற்க மொத்தம், 3 ஆயிரத்து, 819 பேர் விண்ணப்பித்தனர். ஆனால், இந்த தேர்வில், ஆயிரத்து, 595 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த தேர்வில் 2 ஆயிரத்து, 224 பேர் பங்கேற்கவில்லை. இதனால் பல தேர்வறைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க மொபைல், இன்டர்நெட் சேவைகளை தடுப்பதற்கான ஜாமர் கருவிகளும், அனைத்து தேர்வு அறைகளிலும் கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா, பொது பார்வையாளராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி அங்கீத்குமார், உதவி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஜெய்சங்கர், கண்ணன் ஆகியோர் தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.அதேபோல, தீயணைப்பு நிலைய அதிகாரி பதவிக்கான எழுத்து தேர்வு, லாஸ்பேட்டை, இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில் நேற்று மதியம் 2:30 மணிக்கு துவங்கி மாலை 4:00 மணி வரை நடைபெற்றது.
இதையொட்டி, மதியம் 2:00 மணிக்கு தேர்வு மைய நுழைவு வாயில் மூடப்பட்டது. அதன்பிறகு, தேர்வு மையத்துக்கு வந்த தேர்வர்கள் யாரும் தேர்வு எழுதி அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த தேர்விற்கு மொத்தம், 533 பேர் விண்ணப்பித்தனர். 425 பேர் மட்டுமே கலந்து கொண்டு, தேர்வெழுதினர். இதில், 108 பேர் பங்கேற்காமல் 'ஆப்சென்ட்' ஆகினர்.