/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொறியாளர்கள் நிறுவன 15ம் ஆண்டு கூட்டம்
/
பொறியாளர்கள் நிறுவன 15ம் ஆண்டு கூட்டம்
ADDED : நவ 02, 2025 10:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:  இந்திய பொறியாளர்கள் நிறுவனம் புதுச்சேரி நடுவத்தின் 15வது ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது.
தலைவர் சீனு திருஞானம் வரவேற்றார். செயலர் சவுந்திரராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் 2025-26ம் ஆண்டிற்கான வரவு செலவு ஒப்புதல் பெறப்பட்டது.
தணிக்கையாளர் நியமனத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து 2025-27ம் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதன்படி, தலைவராக சவுந்திரராஜன், செயலராக தேவதாசு, குழு உறுப்பினர்களாக குமார், கருணாகரன், கணேசன், சிவக்குமார், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். செயலர் தேவதாசு நன்றி கூறினார்.

