/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீயணைப்பு துறையில் 75 பணியிடங்கள் 16,343 பேர் விண்ணப்பம் பிப்., 26ம் தேதி உடற்தகுதி தேர்வு

ADDED : ஜன 19, 2024 10:53 PM
புதுச்சேரி, - தீயணைப்பு துறையில் 6 நிலைய அதிகாரி உட்பட 75 பணியிடங்களுக்கு 16,343 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு அடுத்த மாதம் 26ம் தேதி நடக்கிறது.
தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 5 நிலைய அதிகாரிகள், 58 தீயணைப்பு வீரர்கள், 12 தீயணைப்பு ஓட்டுநர் கிரேடு-3 பணியிடங்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி மற்றும் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதிகளில் அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதற்கு மொத்தம் 16,343 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்பட்டன. தற்போது இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு அடுத்த மாதம் 26ம் தேதி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அட்மிட் கார்டு, வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும் என, உள்துறை சார்பு செயலர் தெரிவித்துள்ளார்.
இதில், 5 நிலைய அதிகாரிகள் பணியிடங்களில் ஆண்கள்-3,பெண்கள்-2, மற்றும் 58 தீயணைப்பு வீரர்கள் பணியிடங்களில் ஆண்கள்-39, பெண்கள்-19 பேர் என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 12 தீயணைப்பு ஓட்டுநர் கிரேடு-3 பணியிடங்கள் ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
நிலைய அதிகாரி பணிக்கு ஆண்கள்-4074, பெண்கள் 577 என, மொத்தம் 4,651 பேரும், தீயணைப்பு வீரர் பணிக்கு ஆண்கள்-9503, பெண்கள்-1343 என 10,846 பேரும், தீயணைப்பு வீரர் ஓட்டுநர் பணிக்கு 846 ஆண்கள் விண்ணப்பித்துள்ளனர்.