தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மது போதையில் ரகளையில் ஈடுபட்ட 17 பேர் கைது

மது போதையில் ரகளையில் ஈடுபட்ட 17 பேர் கைது

மது போதையில் ரகளையில் ஈடுபட்ட 17 பேர் கைது


UPDATED : நவ 02, 2026 07:09 PM

ADDED : நவ 02, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 07:09 PM ADDED : நவ 02, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேதராப்பட்டு போலீசார் நேற்று (நவ.,1) பிப்டிக் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வானுார் தாலுகா கூட்ரோடு பகுதியை சேர்ந்த யுவராஜ்,37; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

மேட்டுபாளையம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் துரைக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று மேட்டுப்பாளையம் சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த அரவிந்த்,28; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று கனகன் ஏரிக்கரை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வி.மணவெளி ஐயனார்,36; வாணரப்பேட்டை ராஜா,35; கோபிநாத்,36; மேரி உழவர்கரை தனியார் பார் அருகே ரகளை செய்த ராஜி,37; முத்திரைப்பாளையம் சரவணன்,28; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

காலாப்பட்டு போலீசார் நேற்று பெரியகாலாப்பட்டு இ.சி.ஆர்., தனியார் பார் அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட விழுப்புரம் மாத்துார் முனுசாமி,41; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

ஒதியஞ்சாலை போலீசார் நேற்று உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட புதுச்சேரி கேடி தோட்டம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்,26; என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

உருளையன்பேட்டை போலீசார் அய்யனார் கோவில் தெருவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் பார் அருகில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நெல்லித்தோப்பு இளையவாணன், 42 என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அதே போல், மறைமலையடிகள் சாலை தனியார் பார் அருகில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த மகமது அலி, 36; பொது இடத்தில் ரகளை 7 பேர் மீது வழக்கு கைது செய்தனர்.

வில்லியனுார் போலீசார் நேற்று மணவெளி சாலை களத்து மேட்டு தெருவில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட, வி.மணவெளி வாசு மகன் சீனு,27; நாகராஜ் மகன் திவாகர்,27;மாயவன் மகன் திருமுகன்,25; திருபுவனை பாளையம் ராஜா,36; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

மாகே போலீசார் நேற்று முன்தினம் மெயின்ரோடு கல்லறை சந்திப்பு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் பார் அருகே மது போதையில் ரகளையில் ஈடுபட்ட கேரளம் கண்ணுார் பகுதியை சேர்ந்த ராகுல்,29; ராபின்ராய், 25; ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஏனாம் போலீசார் நேற்று முன்தினம் பைபாஸ் சாலை தனியார் பார் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அப்பகுதியில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் இந்திரபளம் பகுதியை சேர்ந்த கீசலாநானிபாபு,32 என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us