ADDED : ஜூன் 24, 2026 01:26 AM
பாகூர்: டீ கடைக்காரரை தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், ரெட்டிச்சாவடி அடுத்த மேலழிஞ்சப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இறைமுடி, 47. இவர் கடலுாரில் டீ கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், இவர் இரவு டீ கடையை மூடிவிட்டு விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
சேலியமேடு அருகே பைக்கை நிறுத்திவிட்டு மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த இரண்டு பேர், இறைமுடியிடம் எந்த ஊர், ஏன் நிற்கிறாய் என கேட்டு, அவரை திட்டி தாக்கிவிட்டு, தப்பிச் சென்றனர். காயம் அடைந்த அவர் பாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அவரை தாக்கிய நாகப்பனுார் சக்திவேல், ஆனந்த் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
