அடையாளம் தெரியாத நபர் கொலை வழக்கில் 2 பேரை பிடித்து விசாரணை
அடையாளம் தெரியாத நபர் கொலை வழக்கில் 2 பேரை பிடித்து விசாரணை
ADDED : செப் 01, 2026 11:43 PM
புதுச்சேரி: அடையாளம் தெரியாத நபர் கொலை வழக்கில், 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, கருவடிக்குப்பம் சிங்கம் பார்க்கில் நேற்று முன்தினம் காலை 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில், வடக்கு போலீஸ் எஸ்.பி., வம்சிதரெட்டி தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட அடையாளம் தெரியாத நபர் அப்பகுதியில் யாசகம் பெற்று, சாராயம் குடித்து வந்தது தெரிந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 2 பேரை நேற்று போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
