ADDED : ஜூலை 18, 2025 04:40 AM
புதுச்சேரி:தேங்காய்திட்டில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
முதலியார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் கடந்த 15ம் தேதி ரோந்து சென்றனர். தேங்காய்திட்டு, சுடுகாடு அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 நபர்கள், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை விரட்டி பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள், வேல்ராம்பட்டு, திருமகள் நகரை சேர்ந்த ராம்கி (எ) ரோலாஸ், 28; தொண்டமாநத்தம், ராமநாதப்புரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ், 24; என்பதும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ஒரு மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில், ராம்கி மீது டி.நகர் போலீஸ் நிலையத்திலும், ரமேஷ் மீது கண்டமங்கலம், பாகூர் போலீஸ் நிலையங்களிலும் கஞ்சா வழக்குகள் உள்ளது.

