ADDED : அக் 30, 2026 08:59 PM
அ நிறம் | அளவு
பாகூர்: பாகூரில் தனியார் பொறியில் கல்லுாரி பஸ் மோதிய விபத்தில், மாணவர் உள்ளிட்ட இரண்டு பேர் காயமடைந்தனர்.
பாகூர் சித்தேரி வாய்க்கால் விநாயகர் கோவில் நான்கு முனை சந்திப்பு பகுதி வழியாக இன்று (அக்.,30) காலை கடுவனுாரை சேர்ந்த அகிலன், 15; என்ற 10ம் வகுப்பு மாணவர், பாகூரில் டியூஷன் முடித்து விட்டு, லிப்ட் கேட்டு ஒரு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
பைக்கை, கரைமேடு கிராமத்தை சேர்ந்த விஷ்ணு, 29; என்பவர் ஓட்டிச் சென்றார். அவ்வழியாக வந்த தனியார் பொறியியல் கல்லுாரி பஸ், பைக் மீது மோதியது.
இதில், அகிலன், விஷ்ணு இருவரும் காயமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
