ADDED : அக் 30, 2026 08:59 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி முதலாமாண்டு மாணவர் அறிமுக விழாவில், முதல்வர் ரங்கசாமி சேர்க்கை ஆணையை வழங்கினார்.
புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், முதலாமாண்டு மாணவர் அறிமுக விழா மறறும் வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா இன்று (அக்.,30) நடந்தது.
சுாகதார துறை இயக்குனர் செவ்வேள், மருத்துவக் கல்லுாரி இயக்குனர் உதயசங்கர், டீன் ராமச்சந்திர வி பட், மருத்துவக் கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு செயலர் குமார் சிறப்புரையாற்றினார்.
முதல்வர் ரங்கசாமி முதலாமாண்டு மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை மற்றும் வெள்ளை அங்கி வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
