தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போதையில் ரகளை: 12 பேர் கைது

போதையில் ரகளை: 12 பேர் கைது

போதையில் ரகளை: 12 பேர் கைது


ADDED : அக் 30, 2026 08:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 08:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

லாஸ்பேட்டை சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் நேற்று (அக்.,29) லாஸ்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். இ.சி.ஆர்., சூப்பர் மார்க்கெட் பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட லாஸ்பேட்டை வீரப்பன்,48; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் போலீசார், நேற்று ஐ.டி.ஐ., சாலையில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட, ஐயங்குட்டிப்பாளையம் செல்வமணி என்பவரை கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று சரகத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். கனகன் ஏரிப்பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கவுண்டன்பாளையம் வினோத்குமார்,26; திருவண்ணாமலை, கீழ்பென்னாத்துார் அறிவரசன்,32; மேரி உழவர்கரை பகுதியில் அரியாங்குப்பம் பாபு,49; மூலகுளம் ஜெ.ஜெ., நகர் ஆர்ச் அருகில் உழவர்கரை முகுந்தன்,23; தக்ககுட்டை தனியார் பார் அருகே மூலகுளம் வினோத், 27, ஆகியோரை கைது செய்தனர்.

தவளகுப்பம் போலீசார் அலுத்துவெளி பகுதியில் நேற்று இரவு ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட தவளகுப்பம் பரத்,26, என்பவரை கைது செய்தனர்.

காலாப்பட்டு போலீசார் நேற்று பிள்ளைசாவடி இ.சி.ஆரில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கீழ்சாத்தமங்கலம் தாமஸ்,27; பெரியகாலாப்பட்டு ஜெயில் சாலையில் பெரியகாலாப்பட்டு ஐயப்பன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஒதியஞ்சாலை போலீசார் நேற்று பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வம்பாகீரப்பாளையம் ஆட்டோ ஸ்டேண்டில் ரகளையில் ஈடுபட்ட வம்பாகீரப்பாளையம் வேலன்,50; உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் கொசப்பாளையம் வீரராகவன், 43 ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us