/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
ADDED : ஆக 28, 2025 02:11 AM
புதுச்சேரி: மூலக்குளம் ஜெ.ஜெ., நகர் அருகே பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூலக்குளம் ஜெ.ஜெ. நகர் 11வது குறுக்கு தெருவில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தி காட்டி மிரட்டி வருவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கத்தியுடன் சுற்றிய வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், மூலக்குளம் ஜெ.ஜெ. நகர் 7 வது குறுக்கு தெருவை சேர்ந்த கிதியோன், 21; என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதேபோல், மூலக்குளம் ஜெ.ஜெ. நகர், ரயில்வே கேட் அருகே பொதுமக்களை கத்தி காட்டி மிரட்டிய மூலக்குளத்தை சேர்ந்த அரவிந்தன், 23; என்பவரை போலீசார் கைது செய்தனர்.