ADDED : ஜூலை 01, 2026 06:18 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் 2 பேர் ரூ. 12 ஆயிரம் இழந்துள்ளனர்.
மதகடிப்பட்டை சேர்ந்தவர் இன்ஸ்டாகிராமில் ஆடை விற்பனை தொடர்பான விளம்பரத்தை பார்த்து, அவற்றை ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, அவரை தொடர்பு கொண்ட மர்மநபர் முன்பணம் செலுத்தும்படி தெரிவித்துள்ளார். அதைநம்பி மர்மநபருக்கு ரூ. 8 ஆயிரத்து 250 செலுத்தி ஏமாந்துள்ளார்.
இதேபோல், வைத்திகுப்பத்தை சேர்ந்தவர் மொபைல் செயலி மூலம் கடன் வாங்கி, அதனை முழுதும் திரும்ப செலுத்தியுள்ளார். இந்நிலையில் மர்மநபர் ஒருவர், அவரது படத்தை மார்பிங் செய்து அனுப்பி, கூடுதல் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதில் பயந்துபோன அந்த நபர் மர்மநபருக்கு ரூ. 4 ஆயிரம் அனுப்பி ஏமாந்துள்ளார்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
