தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., பூத்திற்கு 2 தெருமுனை சாதனை விளக்க கூட்டம்

 பா.ஜ., பூத்திற்கு 2 தெருமுனை சாதனை விளக்க கூட்டம்

 பா.ஜ., பூத்திற்கு 2 தெருமுனை சாதனை விளக்க கூட்டம்


ADDED : பிப் 24, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 04:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஓட்டுச்சாவடி வாரியாக மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை கொண்டு ஓட்டுகளாக மாற்ற பா.ஜ., களம் இறங்கியுள்ளது.

இது குறித்து பா.ஜ., பொதுச் செயலாளர் மோகன் குமார் கூறியதாவது:

கடந்த 2016ம் ஆண்டு பொய் வாக்குதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த காங்., - தி.மு.க., கூட்டணி அரசு மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் அறிவித்த 54 வாக்குறுதிகளை ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. ஒருமுறை கூட முழு பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை.

என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணி அரசு 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு 10 ஆயிரம் பேருக்கு முதியோர் பென்ஷன், இருமுறை ரூ.500 உயர்த்தப்பட் டு ள்ளது. ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி, கோதுமை வழங்கி வருகின்றது. மத்திய அரசு, ஆயுஷ்மான் பாரத் உள்பட அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சென்று, அவர்களின் வாழ்வாரத்தை உயர்த்தியுள்ளது.

இந்த திட்டங்களை பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, பா.ஜ., தலைவர் ராமலிங்கம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனைப்படி, இப்போது சாதனை விளக்க கூட்டத்தை துவங்கியுள்ளோம். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us