/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நள்ளிரவில் பைக் திருடிய2 தொழிலாளிகள் கைது
/
நள்ளிரவில் பைக் திருடிய2 தொழிலாளிகள் கைது
ADDED : ஏப் 20, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்:தாராபுரம், புதுக்கோட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் நாட்ராயன், 47; இவரது பைக்கை சில நாட்களுக்கு முன் வீட்டு முன் நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் பைக்கை இருவர் தள்ளி செல்வதை பார்த்து கூக்குரல் எழுப்பினார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் பிடித்து தாராபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.
இருவரும் திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பூபாலன், 29; பழனி, கலையமுத்துார் நாகராஜ், 29, என்பது தெரிந்தது. அதே பகுதியில் ஒரு செங்கல் சூளையில் கூலி வேலை செய்கின்றனர். மது போதையில் பைக்கை திருடி சென்றது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், தாராபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

