UPDATED : அக் 10, 2026 09:41 PM
ADDED : அக் 10, 2026 09:17 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று நடந்த மக்கள் மன்றத்தில் மக்கள் கொடுத்த 21 புகார் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.
உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் மக்கள் கொடுத்த புகார் மனு மீது விசாரணை நடத்தினார். அதே போல், பாகூர் போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில் சீனியர் எஸ்.பி.,க்கள் திவ்யா, ரச்னா சிங், திருக்கனுாரில் எஸ்.பி., அனுராக் சோப்ரா, டி.நகர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., வம்சீதர ரெட்டி மக்கள் கொடுத்த புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தினர்.
மேலும், ஏனாம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., வரதராஜன், மாகியில் எஸ்.பி., தனசேகரன், புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன் பங்கேற்றனர்.
பொதுமக்கள் கொடுத்த 38 புகார் மனுக்களில் 21 மனு மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
