தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இளம் வயதினருக்கும் முழங்கால் வலி: டாக்டர் வீரப்பன் தகவல்

இளம் வயதினருக்கும் முழங்கால் வலி: டாக்டர் வீரப்பன் தகவல்

இளம் வயதினருக்கும் முழங்கால் வலி: டாக்டர் வீரப்பன் தகவல்


UPDATED : அக் 10, 2026 10:57 PM

ADDED : அக் 10, 2026 09:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 10:57 PM ADDED : அக் 10, 2026 09:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முழங்கால் வலி இளம் வயதினருக்கும் ஏற்படுவதாக டாக்டர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தி போஷ் ஆர்தோ மருத்துவமனை டாக்டர் வீரப்பன் கூறியதாவது:

நாளை (12ம் தேதி) முழங்கால் மற்றும் கீல்வாத விழிப்புணர்வு நாள். முழங்கால் வலி வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் பிரச்னை அல்ல. பல்வேறு காரணங்களால் இளம் வயதினருக்கும் ஏற்படுகிறது. வலியை அலட்சியம் செய்யாமல், ஆரம்பத்திலேயே டாக்டரை அணுகி சரியான காரணத்தை கண்டறிய வேண்டும்.

பாதிப்பை பொறுத்து சிகிச்சை மாறுபடும். ஆரம்ப நிலையில், உடற்பயிற்சி, பிசியோதெரபி உள்ளிட்டவைகள் மூலம் மூட்டு இயக்கத்தை மேம்படுத்த முடியும். நோய் தீவிரமாகி சிகிச்சை முறைகள் பலனளிக்காத சில நோயாளிகளுக்கு மட்டுமே மூட்டு மாற்று சிகிச்சை தேவைப்படும்.

கீல் வாதத்திற்கு ஒரே மாதிரியான சிகிச்சை தேவையில்லை. நோயின் நிலை, வயது, உடல் எடை, வலி மற்றும் மூட்டு பாதிப்பின் அளவை பொறுத்து டாக்டர் தீர்மானிப்பார்.

உடல் எடையை கட்டுப்படுத்துதல், மருத்துவரின் ஆலோசனையுடன் சரியான உடற்பயிற்சி செய்வது, தசைகளை வலுப்படுத்துவது மற்றும் மூட்டுகளுக்கு தேவையற்ற அழுத்தத்தைத் தவிர்ப்பது ஆகியவை மூட்டு ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us