/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கேலோ இந்தியா தேசிய போட்டி புதுச்சேரி வீரர்கள் 26 பேர் தேர்வு
/
கேலோ இந்தியா தேசிய போட்டி புதுச்சேரி வீரர்கள் 26 பேர் தேர்வு
கேலோ இந்தியா தேசிய போட்டி புதுச்சேரி வீரர்கள் 26 பேர் தேர்வு
கேலோ இந்தியா தேசிய போட்டி புதுச்சேரி வீரர்கள் 26 பேர் தேர்வு
ADDED : ஏப் 24, 2025 05:18 AM
புதுச்சேரி: பீகாரில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளைஞர்தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 26 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கேலோ இந்தியா இளைஞர்தேசியவிளையாட்டு விழா வரும் மே 4ம் தேதி முதல் 25ம் தேதி வரை பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ளது. 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் இப்போட்டியில், புதுச்சேரி மாநிலம் சார்பில்,பங்கேற்கபல்வேறு விளையாட்டுகளில் வீரர்கள் தேர்வு முகாம் நடந்தது.
அதில், மல்லர் கம்பம்போட்டியில் தலா 6 மாணவ, மாணவிகளும்,செட்டக் சக்ரா போட்டியில் 3 மாணவர்கள், மல்யுத்தம் மற்றும் பளு துாக்குதல் போட்டியில் தலா 3 மாணவிகள், கலரி பையட் போட்டியில் மாகியை சேர்ந்த 3 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என மொத்தம் 26 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிறப்பு பயிற்சி மேற்கொண்டு அடுத்த மாதம் பீகாரில் நடைபெறும் தேசிய அளவிலான கேலோ இந்தியா போட்டியில் புதுச்சேரி மாநிலம் சார்பில், பங்கேற்க உள்ளனர்.