தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்பனை 3 பேர் கைது

 கஞ்சா விற்பனை 3 பேர் கைது

 கஞ்சா விற்பனை 3 பேர் கைது


ADDED : ஜூலை 04, 2026 02:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 02:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த அரியூர் மெயின்ரோட்டில் இளைஞர்கள் சிலர் மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற வில்லியனுார் போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்களிடம் இருந்த 50 கிராம் கஞ்சா பாக்கெட்டை பறிமுதல் செய்து, அரியூர் பகுதியை சேர்ந்த அய்யனார் மகன் சதீஷ்குமார், 21, அவரது சகோதரர் செந்தில்குமார், 20, எம்.என் குப்பத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் கதிரவன், 21, ஆகியோர் என தெரியவந்தது.

இவர்கள் புதுச்சேரி துப்புராயபேட்டையைச் சேர்ந்த தினேஷ் என்பவரிடம் இருந்து கஞ்சா பாக்கெட்டுகளை வாங்கி வந்து, அதிக விலைக்கு கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us