UPDATED : நவ 06, 2026 07:21 PM
ADDED : நவ 06, 2026 01:24 AM
அ நிறம் | அளவு
பாகூர்: பைக் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.
கடலுார் அடுத்துள்ள திருவந்திபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன் 35; கூலித்தொழிலாளி. இவர் கடந்த 3ம் தேதி சொந்த வேலையாக தனது நண்பர் களான சந்துரு 27; சரவணன் ஆகியோருடன் பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பம் கிராமத்திற்கு சென்றுள்ளார். பைக்கை சந்திரு ஓட்டிச் சென்றுள்ளார்.
விழுப்புரம் –நாகப்பட்டினம் புறவழிச்சாலை சந்திப்பில் உள்ள தனியார் மதுபான கடை சாலையை கடக்க முயன்றனர். அப்போது, கடலுார் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இந்த விபத்தில், சந்துரு, குணசேகரன், சரவணன் 3 பேரும் காயமடைந்தனர்.
புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
