தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நகர பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

நகர பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

நகர பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்


ADDED : நவ 06, 2026 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 04:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி இன்று 6 முதல் 9 ம் தேதி வரை புதுச்சேரி நகர பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து வடக்கு – கிழக்கு எஸ்.பி., ரட்சனா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புது பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் அனைத்து வழித்தடப் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் புஸ்ஸி வீதி வழியாக, சின்ன சுப்பராய பிள்ளை வீதி, சுப்பையா சாலை, சொனாம்பாளையம் சந்திப்பு, எச்.எம்., காசிம் சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை மற்றும் அஜந்தா சந்திப்பு வழியாக முத்தியால்பேட்டை நோக்கிச் செல்ல வேண்டும்.

இ.சி.ஆரில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் அஜந்தா சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, எஸ்.வி.பி., சாலை, செஞ்சி சாலை, சோனாம்பாளையம் சந்திப்பு மற்றும் சுப்பையா சாலை வழியாக பழைய பஸ் ஸ்டாண்டை அடைந்து, அங்கிருந்து மறைமலை அடிகள் சாலை வழியாக புது பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.

அண்ணா சதுக்கம் முதல் 45 அடி சாலை சந்திப்பு வரையிலான அண்ணா சாலையில், பட்டாணிக்கடை சந்திப்பு முதல் ஜி.ஆர்.டி., சந்திப்பு வரையிலான காமராஜர் சாலையிலும் இன்று 6 முதல் 9ம் தேதி வரை வரை தினமும் மாலை 4 மணி முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேரு வீதி மற்றும் இதர வீதிகள்: கூட்ட நெரிசலைப் பொறுத்து நேரு வீதியில் வாகனங்கள் நுழைவது தடை செய்யப்படும். மேலும், எஸ்.எஸ்., பிள்ளை வீதி, பாரதி வீதி மற்றும் மகாத்மா காந்தி சாலைப் பகுதிகளில் செட்டி வீதி முதல் நீடராஜப்பையர் வீதி வரை இன்று 6 முதல் 9ம் தேதி வரை தினமும் காலை 9:30 முதல் இரவு 11:00 மணி வரை இருசக்கர வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது பொருட்கள் தென்பட்டால் காவல் கட்டுப்பாட்டு அறையின் 112 என்ற எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us