தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது


ADDED : நவ 07, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் இளைஞரை வெட்டி கொல்ல முயன்ற இரு சிறுவர்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை, மடுவுபேட், சேத்திலால் நகரை சேர்ந்தவர் அய்யனார் மகன் பவித்ரன்,18. இவர் நேற்று (நவ.,6) நள்ளிரவு 12:30 மணியளவில் மடுவுபேட் கிருஷ்ணா நகர் மெயின் ரோட்டில் பைக்கில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின் தொடர்ந்து பைக்கில் வந்த மூன்று பேர் அவரை வழி மறித்து சரமாரியாக பயங்கர ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பவித்ரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து அங்கு வந்த லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில் பவித்ரனை கொல்ல முயன்றது பாகூர் பகுதியை சேர்ந்த இளங்கோ மகன் இளஞ்செழியன்,19; மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது இரண்டு சிறுவர்கள் என தெரியவந்தது.

பவித்ரன் மற்றும் இளஞ்செழியன் ஆகியோரிடையே ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் இளஞ்செழியனை காலாப்பட்டு சிறையிலும், இரண்டு சிறுவர்களை கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.

இதில் பவித்ரன் சமீபத்தில், ஆயுத வழக்கில் சிறை சென்று திரும்பியதும், இளஞ்செழியன் மீது கூட்டு கொள்ளை முயற்சி வழக்கு உள்ளதும் குறிப்பிடதக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us