47வது ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன்: பெத்தி செமினார் பள்ளி சாதனை
47வது ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன்: பெத்தி செமினார் பள்ளி சாதனை
UPDATED : நவ 07, 2026 06:09 PM
ADDED : நவ 07, 2026 04:16 PM

புதுச்சேரி: புதுச்சேரி, பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவிலான தடகள போட்டியில் ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை 47வது ஆண்டுகளாக வென்று சாதனை படைத்தனர்.
புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வி இயக்ககம் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், 35 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் மகாத்மா காந்தி சாலை, பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று, ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். இதன் மூலம் இப்பள்ளி தொடர்ந்து 47வது ஆண்டுகளாக ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் முதல்வர் ஆரோக்கியராஜ் பாராட்டினார். மேலும், விளையாட்டு மரபைத் தொடர்ந்து நிலைநாட்டி வரும் மாணவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் குழு உணர்வை வெகுவாகப் பாராட்டினார். ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
