கால்பந்து சங்க நிர்வாகிகள் சபாநாயகரை சந்தித்து மனு
கால்பந்து சங்க நிர்வாகிகள் சபாநாயகரை சந்தித்து மனு
UPDATED : நவ 07, 2026 04:54 PM
ADDED : நவ 07, 2026 04:52 PM

புதுச்சேரி: புதுச்சேரி கால்பந்து சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் தற்காலிக சபாநாயகர் அன்பழகனியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில், கால்பந்து சங்கம், புதுச்சேரி அண்ணா திடலில் 52 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அண்ணா திடலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றதால் தற்காலிகமாக இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வந்தது.
அண்ணா திடல் கட்டுமான பணி முடிந்துள்ள நிலையில் தங்களை இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் இருந்து காலி செய்ய வலியுறுத்துகின்றனர். எங்களுக்கான இடத்தை பெற்று தர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, தனசேகர், ராமலிங்கம், ஆறுமுகம், சுகுமாரன், முனியாண்டி, கணேசன் முருகானந்தம், வினோத்குமார், நாகமணி, ஆகியோர் உடனிருந்தனர்.
